வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களை காணவில்லை
வெல்லவாய எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்லேவல நீர்வீழ்ச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த 10 பேர் கொண்ட குழு அங்கு நீராடச்சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன இளைஞர்கள்
காணாமல் போன இளைஞர்கள் காத்தான்குடி மற்றும் அக்கரப்பற்று பிரதேசங்களை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் குளிப்பதற்கு அனுமதியில்லை என பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீராடச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
காணாமற்போன இளைஞரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் உயிர்காப்புப் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam