வவுனியாவில் வாள்வெட்டுத் தாக்குதல்! இருவர் படு காயம்
வவுனியா - கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கி கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற அவர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்தார். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam