அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு
நாட்டின் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் நேற்று (25.02.2024) மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையிலிருந்து நிர்வாணமாக 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார்
பேலியகொட 4ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் தொடருந்தில் மோதி உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்துள்ளதுடன் வலது கையில் பச்சை குத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து நிர்வாணமான நிலையில் 55 முதல் 60 வயதுடைய ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், ராகமை - கடவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் சாம்பல் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்துள்ளதுடன் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
