மட்டக்களப்பில் தடை செய்யப்பட்ட பொருட்களை தம்வசம் வைத்திருந்த நால்வர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் பொலிஸார் தேடல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது ஹெரோயினை எடுத்து சென்ற ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மைலம்பாவெளி பகுதியில் வீதியில் வைத்து மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியில் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஆயிரம் மில்லிக்கிராம், கஞ்சாவையும், மோட்டர் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு நாவற்கேணி மற்றும் மைலம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 50 மில்லிக்கிராம் கஞ்சாவையும் ஒரு மோட்டர்சைக்கிள் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
