நான்கு கோர விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
இலங்கையின் பல பகுதிகளில் நேற்று(29.05.2026) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெத்தாவல பகுதியில் இருந்து வஹரக நோக்கிய உப வீதியில், கோனகல்தெனிய நோக்கிச் செலுத்தப்பட்ட டிரக்டர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
லொறியுடன் சைக்கிள் மோதி விபத்து
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, கோனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் வஹரக பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டி சந்தி ஊடாக, தொடருந்து நிலைய வீதியைக் கடந்து பியகம வீதி நோக்கிச் சென்ற லொறியொன்று, அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
தங்கல்ல - வீரகெட்டிய வீதியின் வல்கம்எலிய பகுதியில் வீரகெட்டிய நோக்கிச் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி, தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் தங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட - உடப்புவ வீதியின் சமீரகம பகுதியில், உடப்புவ பகுதியில் இருந்து கடயாமட்ட நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, தனக்கு முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
இதன்போது, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி, கொத்தாந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவராவார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்துகள் அனைத்தும் தொடர்பில் அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam