கசிப்பு அருந்திய நான்கு பேர் மரணம்
இப்பலோகம பிரதேசத்தில் சில கிராமங்களில் கசிப்பு அருந்தியவர்களில் நான்கு பேர் திடீரென இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இப்பலோகம கல்வங்குவ பிரதேசத்தை சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சலாகே ருவான் பண்டார என்ற 38 வயதான நபர் கெக்கிராவை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அதே இடத்தில் வசிக்கும் ஏக்கநாயக்க முதியன்சலாகே நிஷாந்த பண்டார என்ற 39 வயதான நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பஹால செம்புவ பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான வஸ்துவாககே ஆரியபால என்பவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அளுத் தம்போவிட்ட பகுதியை சேர்ந்த 65 வயதான டிக்கிரி பண்டாகே பண்டாரநாயக்க என்பவரும் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் நான்கு பேரும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அருந்திய கசிப்பு விஷமானதால், உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
