நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரணை - திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, தர்மபால மாவத்தையில் கல்முனை நோக்கிச் சென்ற வான் ஒன்று முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை
களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹொரணையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்து கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், 16 வயதுடைய யுவதியுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan