ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 4 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்

Sri Lankan Tamils Sri Lankan political crisis Sri Lanka Government
By Rakesh Oct 22, 2022 09:44 PM GMT
Report

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 8 தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 4 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் | Four Of The Political Prisoners

மேலும் தெரிவிக்கையில்,“தீபாவளியையொட்டி ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான கடிதம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சென்றிருந்தது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 8 தமிழ் அரசியல் கைதிகளும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். அவர்களில் நான்கு பேர் நேற்று  முன்தினம் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்படுவதில் சிறுசிறு சட்டச் சிக்கல்கள் நிலவுகின்றன.

சட்டச் சிக்கல்கள்

இந்த நால்வரில் ரகுபதி சர்மா உள்ளிட்ட இருவர் தமது சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய 4 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் | Four Of The Political Prisoners

தற்போது அவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆதலால், நீதிமன்றில் அவர்கள் இருவரும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டை திரும்பப் பெற்றதும் நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதாகக் கருதப்பட்டு அவர்கள் இருவரும் விடுவிக்கப்படுவார்கள்.

ஏனைய இரண்டு பேருக்கும் நீதிமன்றம், கடூழியச் சிறைத்தண்டனையுடன் 6 மாதங்கள் புனர்வாழ்வும் வழங்கித் தீர்ப்பிட்டுள்ளது. ஆதலால், அவர்கள் புனர்வாழ்வுக்குச் செல்லாமல் விடுவிக்கப்படுவதாயின் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அறிவுறுத்தலொன்று வரவேண்டியுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு நீதிமன்றத்தால் தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் சுமத்தப்படாததை அடுத்தே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்"என தெரிவித்துள்ளார்.

16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US