நான்கு விபத்துக்களில் நால்வர் பரிதாப மரணம்
நாட்டில் வெவ்வேறு நான்கு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி, வராகுமர பிரதேசத்தில், வானொன்று பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் பாதசாரி பெண் மரணமடைந்தார்.
வரக்காமுர, உக்குவெல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது பெண்ணே இவ்வாறு மரணமடைந்தார்.
வானின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதன்கடவல ஹபரண வீதியில் பேருந்தொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர் மரணமடைந்தார்.
அமுனிச்சிய, முரியாகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரே மரணமடைந்தார். பேருந்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளை ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை வீதி, உடுவர பிரதேசத்தில், பண்டாரவளையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியில் சென்ற நாயின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார்.
கேபில்ல, பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயது நபரே உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்வரெட்டிய சியமலங்கமுவ வீதியில் மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் பெண் மரணமடைந்தார்.
கந்தவெத்த, இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண்ணே மரணமடைந்தார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
