புத்தளத்தில் தீக்கிரையாக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகள்
புத்தளம்(Puttalam), வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தரித்துநின்ற நான்கு சொகுசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (20.08.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு சொகுசு பேருந்துகளில் ஒன்று முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்த சிசி ரீவி கெமராவை சோதனையிட்டு பார்த்த போது, அடையாளம் தெரியாத நபரொருவரால் இந்த நான்கு சொகுசு பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக , சுமார் 3 கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
