தேர்தல் பிரசார செலவு: வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தேர்தல் பிரசார செலவு வரம்பை மீறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் எந்தவொரு விதி மீறல்களையும் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாக்காளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 109 ரூபாவை மாத்திரம் செலவிட வேண்டும் என அறிவித்து நேற்றிரவு அதிவிசேட வர்த்தமானி வெளியாகியிருந்தது.
தேர்தல் முடிவுகள்
இதன்படி, மொத்த செலவினத்தில் 60 சதவீதத்தை நேரடியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிட முடியும் எனவும், எஞ்சியுள்ள 40 சதவீதத்தை வேட்பாளரின் அரசியல் கட்சி அல்லது குழுவிற்கு ஒதுக்கீடு செய்ய முடியுமெனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் செலவு தொடர்பான அறிக்கையைத் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
