போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் நால்வர் கைது
துபாயில் (Dubai) தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்பவரின் உதவியாளர்கள் நால்வர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முல்லேரியா மற்றும் தொம்பே ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தித்தபத்தர, இராஜகிரிய, தலங்கம மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 27,28,30 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 22 கிராம் 70 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 90 போதை மாத்திரைகள் 20 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா மற்றும் தொம்பே பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |