இலங்கையில் தாதி ஒருவருக்கு ஒரு பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் தாதியாக பணி புரியும் குறித்த பெண்ணுக்கு, இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
நான்கு குழந்தைகள்
பல வருடங்களாக குழந்தை இல்லாத குறித்த பெண் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இந்த நான்கு குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் தாயாருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பது கண்டறியப்பட்ட தருணத்தில் இருந்து சுகப்பிரசவத்திற்காக கடுமையாக முயற்சித்துள்ளனர்.
எனினும் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள், தற்போது குறைமாதப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் நான்கு குழந்தைகளும் ஆரோகியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam