புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது: இயந்திரங்களும் மீட்பு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நால்வரை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன், புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த காட்டுப்பகுதியை விசேட புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து முற்றுகையிட்டனர்.
இதன் போது பெரிய கல்பாறை ஒன்றைக் கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம் மூலம் உடைத்துப் புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரைக் கைது செய்ததுடன், அங்கிருந்து ஜெனறேற்றர் ஒன்றும், கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம், உட்படப் பல உபகரணங்களையும் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாந்தோட்டம்,
வட்டினாக்கலை, அம்பாறை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை
நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
.










அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
