கெசெல்வத்த பவாஸ் படுகொலை! - நால்வர் கைது
பாதாள உலக பிரமுகர் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் நான்கு வாள்கள் மற்றும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (04) இரவு 11 மணியளவில் கெசெல்வத்த பவாஸ் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்டவர் 33 வயதான மொஹமட் கமில் மொஹமட் ஃபவாஸ் என அறியப்பட்டதுடன், அவர் கொழும்பு 12 இல் வசிக்கும் "கெசல்வத்தே ஃபவாஸ்" எனவும் அடையாளம் காணப்பட்டார்.
குற்றக் குழுக்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார், ‘கெசல்வத்த தினுக’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த கொலையை செய்வதற்காக கொலையாளிகள் காரில் வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க... போட்டோஸ் Cineulagam