பளையில் சட்டவிரோத மண் அகழ்வு: நால்வர் கைது (Photos)
பளை - வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு
சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளை பிரதேச மக்களால் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இயந்திரங்கள்
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றி வளைப்பின் போது 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி 4 உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி மாவட்ட
நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan