யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது (Video)
யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 50லீட்டர் கோடா 8 லீட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவல்

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட
உள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri