மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (25.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அனுமதிப்பத்திரமின்றி பரவிபாஞ்சான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
அதேவேளை மூதூர் -மணற்சேனை பகுதியில் உள்ள காணியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிய 4 உழவு இயந்திரங்கள், ரோலர் இயந்திரமும் மூதூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கனரக வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வாகனச் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri