யாழில் போதைப் பொருள் பாவனையில் நால்வர் கைது
யாழ்ப்பாணம் - மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (14) அதிகாலையளவில் நடந்துள்ளது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 61 கிராம் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப் பொருள் பாவனையில் நால்வர் கைது
யாழ். மாவட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும், கைப்பற்றப்பட்ட போதை பொருட்களும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், ஒருவர் கொழும்பை சேர்ந்தவரெனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



