நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சுகளுக்கு நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க நேற்று(22.09.2025) அமெரிக்கா நோக்கி பயணமாகி இருந்த நிலையில், இந்த விஜயத்தின் போது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் சென்றிருந்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவால்
இதன்படி, ஜனாதிபதி ஊடகப் பிரிவால் (PMD) அறிவிக்கப்பட்ட நியமனங்கள் பின்வருமாறு:
தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத் துறை துணை அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரத் துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



