தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் : பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
தங்காலையில் நேற்று(22.09.2025) மூன்று லொறிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 9,888 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மூன்று லொறிகளில் இருந்து 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) உட்பட மொத்தம் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தடுத்து வைத்து விசாரணை
இந்தநிலையில் வாகனங்களின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களும் கல்கிஸ்ஸ, மீட்டியாகொட மற்றும் எல்பிட்டிய பகுதியில் வைத்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தரப்பு தகவல்படி, இலங்கையில் இதுவரை தரைப்பகுதியில் மீட்கப்பட்ட அதிகளவான போதைப்பொருள் தொகை இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
