முல்லைதீவு பாண்டியன் குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
வரலாற்று சிறப்புமிக்க முல்லைதீவு பாண்டியன் குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் இன்று(05) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிகவும் தொன்மை வாய்ந்ததும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான பாண்டியன் குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் யுத்தத்திற்கு பின்னர் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விசேட பூஜை வழிபாடு
இந்நிலையில் யுத்தத்தினால் சேதமடைந்த குறித்த ஆலயத்தின் அன்னதான மண்டபத்தினை புதிதாக நிர்மாணிக்கும் பொருட்டு அடியவர்களின் நிதி பங்களிப்போடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டில் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இப்பிரதேசத்தை சேர்ந்த அடியவர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
