தொடர்பு கொள்ள முயன்றபோது பதிலளிக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட யுவதி
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், 17 வயது சமூக ஊடக செல்வாக்கு மிக்க சனா யூசப்பைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த யூசப், கடந்த திங்களன்று அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
பதிலளிக்க மறுத்ததால்
சனா யூசப்பின் டிக்டொக் கணக்கில் 1.1 மில்லியன் பின்தொடர்வாளர்கள் உள்ளனர்.
அவரது கணக்கில் வெளியிடப்பட்ட கடைசி காணொளி, அவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கொண்டாடும் ஒரு தொகுப்பாகும்.
இந்த நிலையில், கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான இளைஞர், தாம் சனாவை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர் பதிலளிக்க மறுத்ததால், அவரை கொலையைச் செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
