ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சீனாவில் இருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை காலை முன்னிலையாகியிருந்தார்.
அங்கு சஷீந்திர ராஜபக்ஷ ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
உர இறக்குமதி
உர இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - ராகேஷ்





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
