அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்
தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று (09.06.2025) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆரம்பித்து வைப்பு
இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், அப்பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
