வெளிநாடொன்றில் நேரலையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனை!
முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜர் ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றப்படும் மரண தண்டனையைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் இராணுவ முகாமில் ஆயுதம் ஏந்தாத 13 அமெரிக்க வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிடால் ஹசன் என்பவருக்கான மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரி உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
60 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நிறைவேற்றப்படவுள்ள முதலாவது இராணுவ மரண தண்டனையாக, நிடால் ஹசனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று பென்டகன் இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
மரண தண்டனை
இது குறித்து நேற்று (08.09.2026) கருத்து வெளியிட்ட ஹெக்செத், "மக்கள் இதைப் பார்ப்பதையும், இது பகிரங்கமாக நடப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் இது போன்ற குற்றச் செயல்களுக்குக் கடுமையான விளைவுகள் இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை