இலங்கையின் முன்னாள் தமிழ் கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அப்பாத்துரை இந்த தண்டனையை அனுபவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri