தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கைது
தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி, பங்கு மோசடி மற்றும் இலஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(12) நான்கு மணி நேரம் நீடித்த நீதிமன்ற விசாரணையின் போது, 52 வயதான கிம் கியோன் ஹீ, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
எனினும் பிணையில் அனுமதிக்கப்பட்டால், அவர் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்ற அபாயத்தைக் காரணம் காட்டி, சியோல் நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
கைது
இதன்படி தென் கொரியாவின் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஒரே நேரத்தில் சிறையில் இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம்மின் கணவரான, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட முயற்சி தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் மனைவியான 52 வயதான கிம், பங்குகளை உள்ளடக்கிய விலை நிர்ணயத் திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் சுமார் பல இலட்சம் டொலர்களை சம்பாதித்ததாக குற்றத் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
