முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து.. விரைவில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி உரிமைகள் (இரத்து) சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார்.
இந்த வார நாடாளுமன்ற அமர்வு நாட்களுக்குள் சட்டமூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது அவர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள் மற்றும் மாதாந்திர கொடுப்பனவுகளை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது என பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
விஜேராம இல்லம்..
ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளில், மஹிந்த ராஜபக்ச மட்டுமே கொழும்பு-07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமித்துள்ளார். அரசாங்கம் முன்னர் அதனை மீளப் பெற முயற்சித்துள்ளது.
மற்ற முன்னாள் ஜனாதிபதிகள் - சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க - அவர்களின் தனிப்பட்ட இல்லங்களில் வசிக்கின்றனர்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவும் தற்போதுள்ள ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.
இந்நிலையில், இந்த வார நாடாளுமன்ற அமர்வு நாட்களுக்குள் சட்டமூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



