யாழ்.விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் நாளையதினம்(28.06.2023) யாழ்ப்பாணத்திற்கு வருகைதர உள்ளார்.
இவர் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழரின் நீண்டகால பிரச்சினை
இவ்விஜயத்தின்போது, காணி விடுவிப்பு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், தமிழ் மக்களது நீண்டகால மற்றும் சமகால பிரச்சினைகள் சார்ந்து பலதரப்பட்ட சந்திப்புக்களிலும் அவர் பங்கெடுக்கவுள்ளார்.
அவற்றோடு, சர்வமத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன, மததலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் சமூகமட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்.மாவட்ட மக்கள் பிரச்சினைகள் தேவைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்த்து பலமான அரசியல் அழுத்தங்களையும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வதும் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயம் மேற்கொள்ள இருக்கும் இடங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
