சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் ஜனாதிபதி
தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க ஒருபோதும் விரும்பவில்லை.
கடந்த காலக் குரல்கள் இப்போது ஏன் மௌனிக்கப்பட்டுள்ளன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
மேலும் ஐந்தாறு மாவட்டங்களில் கட்சி மாநாடுகள் நடத்தப்படும் என்றும், அந்தக் குரல்கள் மீண்டும் ஒலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam