போரில் உயிர் நீத்தவர்களை தனது வீட்டில் அஞ்சலித்த முன்னாள் ஜனாதிபதி
முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 13 வருடங்கள் ஆகின்றன.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தமது இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க.
இது குறித்து அவர் தனது முகநூல் தளத்தில் இட்டுள்ள பதிவில், நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம். அந்தப் போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam