போர்க் குற்ற வழக்கில் கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோத தடுப்புக் காவல் உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நெதர்லாந்தின் தி ஹேக் போர்க் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990களின் பிற்பகுதியில் செர்பியாவிடமிருந்து கொசோவோ பிரிவதற்காக இடம்பெற்ற மோதல்களின் போது, கொசோவோ விடுதலை இராணுவத்தின் (KLA) உயர் தளபதியாகச் செயற்பட்ட போதே இவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய
அரசியல் எதிராளிகள் மற்றும் செர்பிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டதாகக் சந்தேகிக்கப்பட்ட 96 பேரை கொலை செய்தமை, 385 பேரை சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்திருந்தமை மற்றும் நூற்றுக்கணக்கானோரை சித்திரவதைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

நீதிமன்றத் தீர்ப்பின் போது குற்றச்சாட்டுகளை மறுத்த 58 வயதான ஹாஷிம் தாசி, இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை அடுத்து கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டதோடு, அமைதியின்மை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சற்றுமுன்னர் மட்டக்குளியில் கோர விபத்து: இருவர் பலி - சம்பவ இடத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பொலிஸார்