பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் அனுஸ்டித்த முன்னாள் அரசியல் கைதி
முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும்
தோணிக்கல் பகுதியில் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.30 இற்கு
அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்காலில் மரணித்த தனது உறவுகளுக்காவும், தமிழ் மக்களுக்காகவும் வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் செ.அரவிந்தன் என்ற முன்னாள் அரசியல் கைதியால் குறித்த நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்கால் மண்ணில் மரணித்தவர்கள் நினைவாக பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் தீபச் சிட்டிகள், தீப்பந்தங்கள் ஏற்பட்டப்பட்டு மௌன வணக்கத்துடன், நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த வீட்டின் முன்பாக நேற்றிலிருந்தே பொலிஸார் கடமையில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மத்தியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
