அமெரிக்க அணிக்குள் நுழையும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்
ஐசிசி இருபதுக்கு டி20 உலகக் கிண்ண தொடரின் தொழில்நுட்பக் குழு (Event Technical Committee), அமெரிக்க அணியில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக புதிய வீரரைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஜஸ்தீப் சிங் (Jasdeep Singh) கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, அவரது வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தொழில்நுட்பக்குழுவின் ஒப்புதல்
இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக இஹ்சான் அடில் அமெரிக்க அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பாகிஸ்தான் அணிக்காக ஏற்கனவே 3 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். தற்போது முதல்முறையாக அமெரிக்க அணிக்காகக் களமிறங்கவுள்ளார்.
ஐசிசி விதிகளின்படி, ஒரு வீரர் அதிகாரப்பூர்வமாக அணியில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக, நிகழ்வு தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.
இந்த மாற்றம் அமெரிக்க அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam