வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து (Photos)
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலையளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்த பின்னர் நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட சேதம்
விபத்தின்போது வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
