முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ் நாட்டில், தனியார் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் கையூட்டல் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் நேற்று(26.10.2026) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் 6ஆம்திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மேல் நீதிமன்றத்தில் அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
3 மணிநேர விசாரணை
3 மணி நேர விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், சென்னை. மேல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதி முன்னிலையில் நள்ளிரவில் அவர் பிரச்சன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அன்பில் மகேஷை வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவர் புழல் சிறையில் முதல் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமக்கு எதிரான வழக்கைச் சட்டப்படி தாம் எதிர்கொள்வேன் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.