மத்திய கிழக்கின் போர் பதற்ற நிலை! மகிந்தவின் நெருங்கிய ஈரானிய இராஜதந்திரி பலி
ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், கிழக்கு Tehran நகரின் நர்மாக் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் சிலரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா–இஸ்ரேல் வான்தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் முதல் நாளான பெப்ரவரி 28 அன்று, அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் மூவர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் உச்சத் தலைவர் அமெரிக்கா–இஸ்ரேல் வான்தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாளே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் Uma Oya Multipurpose Development Project திட்டத்திற்கு ஆதரவளித்து, இலங்கைக்கு விஜயம் செய்த ஈரான் தலைவராக இருந்ததால், அஹ்மதினெஜாத் இலங்கைக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
ஈரானின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன், அர்டபில் மாகாண ஆளுநராகவும் பின்னர் தெஹ்ரான் நகர மேயராகவும் பணியாற்றினார்.
பெரும் போராட்டங்கள்
2005 முதல் 2013 வரை ஈரானின் 9வது மற்றும் 10வது நிர்வாகங்களுக்கு தலைமை தாங்கிய அவரது ஆட்சிக்காலம், இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான கடுமையான கருத்துரைகளாலும், ஈரான் அணு திட்டத்தை வேகப்படுத்தியதாலும் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 2009 ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் ஈரானில் “பச்சை இயக்கம்” (Green Movement) எனப்படும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.
2013 இல் பதவி விலகிய பின்னரும், நாடாளுமன்றம் மற்றும் பாதுகாவலர் மன்றம் இடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் ஆலோசனை அமைப்பான Expediency Discernment Council உறுப்பினராக அவர் பணியாற்றி வந்தார்.
அண்மைக் காலங்களில், 69 வயதான அரசியல்வாதி ஈரானின் தற்போதைய ஆட்சிக் குழுவை விமர்சிக்கும் முக்கிய குரலாகவும் விளங்கினார்.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு
தன் ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் நெருங்கிய உறவை பேணிய அஹ்மதினெஜாத், 2008 ஏப்ரலில் கொழும்பு விஜயம் செய்து அந்நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
அப்போது, பாரம்பரிய ஆசிய ஒத்துழைப்பை வலியுறுத்தும் பதாகைகளால் கொழும்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அந்த விஜயத்தின் போது, இலங்கையின் உமா ஒயா நீர்மின் மற்றும் பாசன அபிவிருத்தித் திட்டங்களுக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சலுகை கடன் மற்றும் உதவித் தொகைகளை வழங்க ஈரான் ஒப்புக்கொண்டது.
மேலும், இலங்கையின் ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி திறனை 50,000 பேரல் அளவிலிருந்து 150,000 பேரல் வரை மூன்றரை மடங்கு உயர்த்த 700 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவும் ஈரான் முன்வந்தது.
அப்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரான போர் மீண்டும் தீவிரமடைந்திருந்த சூழலில், மனித உரிமை குற்றச்சாட்டுகளால் மேற்கு நாடுகளிடமிருந்து இலங்கை எதிர்கொண்ட அழுத்தங்களுக்கு மத்தியில், கொழும்பின் வெளிநாட்டு கொள்கை மேற்கு நாடுகளிலிருந்து விலகி ஆசியாவை நோக்கித் திரும்பிய முக்கிய தருணமாக இந்த விஜயம் பார்க்கப்பட்டது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்! அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தும் போரைத் தேர்ந்தெடுத்த ட்ரம்ப்




சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri