முன்னாள் சுகாதார அமைச்சர் விபத்தில் சிக்கி பலி
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான டொக்டர் பி.எம்.ஜி.பி சிரில் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
89 வயதான முன்னாள் சுகாதார அமைச்சர் சிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாகன சாரதியும் படுகாயம்
இந்த மின்தூக்கியில் முன்னாள் அமைச்சருடன் சென்ற அவரது வாகன சாரதியும் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் மூன்றாம் மாடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளை பார்வையிடுவதற்காக மின்தூக்கி மூலம் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
