விடுதலைப் புலிகளின் தலைவரது எண்ணம் இதுதானா..! தமிழரசுக் கட்சி தொடர்பில் முன்னாள் போராளியின் ஆதங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைக் காட்டியது வீட்டு சின்னத்திற்கு அல்ல, மாறாக அது ஒரு கூட்டமைப்புக்கே என ஒரு முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகள் சிலருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னாள் போராளிகள் சிலரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று (29.03.2026) நடைபெற்றுள்ளது.
இதன்போது கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் குறித்த முன்னாள் போராளி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய அழிப்பை தொடரும் தமிழரசுக் கட்சி
அவர் மேலும் கூறுகையில்,
“போராளிகளை பிளவுபடுத்தியவர்களில் நீங்கள் முன்னிலையில் இருக்கிறீர்கள். பிரபாகரன் கைக் காட்டியது வீட்டு சின்னத்திற்கு அல்ல, மாறாக அது ஒரு கூட்டமைப்புக்கே. கூட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

இதுவே உண்மையான விடயம், இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான தேவை என்ன? உங்கள் தனிப்பட்ட அரசியல் கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை செய்தீர்கள். ஆனால் போராளிகளை அவ்வாறு ஏமாற்றி பயன்படுத்தக் கூடாது.
இந்த கருத்தை நான் தனிப்பட்ட ரீதியில் அல்ல, ஒரு கட்சியாகவே தெரிவிக்கிறேன். நீங்கள் தமிழ்த் தேசியத்தைக் அழிக்கின்றீர்கள் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
