எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கிறது மின் கட்டணம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ், 4.3 சதவீதத்தினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, 30 அலகுகளுக்கு 15 ரூபாயினாலும், 30 முதல் 60 அலகுகளுக்கு 45 ரூபாயினாலும், 61 முதல் 90 அலகுகளுக்கு 120 ரூபாயினாலும், 91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 420 ரூபாயினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (30.03.2026) அறிவிப்பொன்று வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
அடுத்த 5 மாதத்திற்கு கட்டாய நடைமுறை! அரச ஊழியர் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் முக்கிய அறிவுறுத்தல்
கட்டண திருத்த அறிவிப்பு
அதன்படி, இந்தப் புதிய கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள ஒரு சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

YOU MAY LIKE THIS VIDEO
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan