முன்னாள் பிரதம நீதியரசருக்கு முக்கிய பதவி
முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு(Jayantha Jayasuriya) அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முக்கிய பதவியொன்றை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்தில் இலங்கைக்கான வதிவிட நிரந்தரப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நியமித்துள்ளது.
உயர் பதவிகளுக்கான மேற்பார்வைக் குழு
அது குறித்த முன்மொழிவு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான மேற்பார்வைக் குழுவிடம் முன்வைக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் ஜயந்த ஜயசூரிய அதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே நாட்டின் பிரதம நீதியரசராக செயற்பட்ட ஒருவர் அரசியல் கட்சியொன்றின் சார்பு நிலையில் செயற்பட்டு, அரசியல் நியமனம் ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan