நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது
புதிய இணைப்பு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் அவரது பயன்பாட்டிற்காக இரண்டு உத்தியோகப்பூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அவர் சட்டவிரோதமாக மற்றொரு சொகுசு ஜீப்பை வாடகைக்கு எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின்படி, அவர் நீர் வழங்கல் திட்டத்திற்கு சொந்தமான ஒப்பந்த நிதியைப் பயன்படுத்தி ஜீப் வாகனத்தை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வழங்கல் சபையின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்செயலால், அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட சபைக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைக்கமைய அவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
YOU MAY LIKE THIS VIDEO