முன்னாள் இராணுவ சிப்பாய்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானம்
முன்னாள் இராணுவச் சிப்பாய்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான தீர்மானம் ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அதன் பிரகாரம் ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பொலிஸ் திணைக்கள சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இராணுவத்தில் பணியாற்றி சட்டபூர்வமாக விலகிக் கொண்டுள்ள அல்லது ஓய்வுபெற்றுக் கொண்டுள்ள 45 வயதுக்குக் குறைவான முன்னாள் இராணுவத்தினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
சுமார் ஆயிரம் பேர் இவ்வாறு பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய தினம்(09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam