முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் தங்காலையில் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரைத் தங்காலைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமகுலிய குளத்துக்கு அருகிலுள்ள நிலத்தில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், 11 ரி 56 தோட்டாக்கள், 3 M.16 தோட்டாக்கள் மற்றும் 3 MPMG தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
விசாரணைகள்
கைது செய்யப்பட்ட நபர், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காவந்திஸ்ஸபுர - திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
