ஸ்பெயின் எல்லையில் காட்டுத் தீ பரவல்! மக்கள் வெளியேற்றம்
மத்திய தரைக்கடல் கடற்கரையில் ஸ்பெயின் எல்லையில் உள்ள போர்ட்போவில் காட்டுத்தீ பரவியுள்ளது.
இந்த தீப்பரவல் நேற்று(05.08.2023) ஏற்பட்டுள்ளதுடன் இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.
குறித்த பகுதியில் தீப்பரவல் அதிகரித்தமையால் 130க்கும் மேற்பட்டவர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ சுமார் 435 ஹெக்டேர் நிலத்தை நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல்
ஸ்பெயினை பிரான்சுடன் இணைக்கும் தொடருந்து நிலையமான போர்ட்போவின் தெற்கில் தீ பரவல் தொடர்பில் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் முன்னெச்சரிக்கையாக மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை மீட்பு பணியில், கட்டலான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 4,000 பேர் மின்சாரம் இன்றி தவிப்பதாகவும், தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள Portbou மற்றும் Figueres இடையே தொடருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டலான் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்ட்போவிற்கும் பிரெஞ்சு எல்லைக்கும் செல்லும் பிரதான வீதியும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



