போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்.. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள விடுதி மற்றும் ஷோப்பிங் வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அதிரடி நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களில், ஆண் சந்தேக நபர்கள்: 23 மற்றும் 48 வயதுடையவர்கள், பெண் சந்தேக நபர்கள்: 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்களிடமிருந்து மொத்தம் 1 கிலோகிராமும் 49 கிராமும் கொண்ட கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam