வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (31) இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இந்த சிகரெட் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
சந்தேகநபர் நேற்று இரவு 10.00 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
