அலைச்சறுக்கில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அவலம்!
வெலிகமை கடற்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(9.8.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டு வந்த 21 வயதுடைய துனிசியா நாட்டவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
துனிசியா சுற்றுலாப் பயணிகள் சிலர் நேற்று (08) பிற்பகல் வெலிகமை 'பரண கடே' கடற்கரைப் பகுதியில்அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய சீற்றமான நிலையினால், குறித்த சுற்றுலாப் பயணி அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தனியார் மூழ்காளர்கள் ஈடுபட்டும் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை.

எனினும், காணாமல் போன சுற்றுலாப் பயணியின் சடலம் இன்று காலை வெலிகமை பரண கடே கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வெலிகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri