வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பெண்களுக்கான புதிய திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வும் பெண்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று(10.10.2023) இடம்பெற்ற விசேட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றும் நடவடிக்கைகளை தொழிலுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் மக்களின் நன்மை கருதி தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தினை வினைத்திறன் மிக்கதாக மாற்றி அதன் ஊடாக சிறந்த சேவையினை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு்ள்ளது.
இதன் போது தொழிலுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் மாவட்டங்களின் நிலைமைகள் தொடர்பிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிக்காந்த்,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீஸ்வரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் தொழிலுறவு,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.